0
ஆவணியில் பிறந்தவர்கள் சுதந்திரமான தொழிலில் இருக்க விரும்புவார்கள். பெருந்தன்மையான குணம் கொண்ட இவர்கள் புகழோடு வாழ காரியங்களை சாதிப்பவர்களாக இருப்பார்கள். எதையும் உடனடியாக செய்து முடித்துவிட வேண்டும் என்ற குணமுடையவர்கள். இதன் காரணமாக இவர்களிடம் பிடிவாத குணமும் இயற்கையாகவே அமைந்திருக்கும். இவர்கள் செய்வது மட்டுமே சரி, மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு என்ற எண்ணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.
இதனால் மற்றவர்களின்பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்.

இந்த மாதத்தில் பிறந்த கடைக்குட்டி குழந்தைகளின் பேச்சுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தை பார்த்து இவர்கள் பிறந்த சிம்ம ஸ்தானத்தில் இருந்து சூரியனின் இருப்பைப் பொறுத்து எந்த அளவுக்கு கவுரவமாக வாழலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக மாறுவார்கள். ஏனெனில் இந்த மாதங்களில் பிறந்தவர்களின் கொள்கைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இவர்களிடம் நிதான புத்தி இருக்கும் அளவிற்கு அவசரமும் இருக்கும் என்பதால் சில காரியங்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே அவசர குணத்தை மட்டும் விட்டுவிட்டால் நல்லது. இவர்களிடம் சிக்கனம் அதிகம்.அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்களின்
உபசரிப்பை பொறுத்தே உறவினர்களும் நண்பர்களும் இவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுவார்கள்.

இவர்களுக்கு கடன் வாங்குவது பிடிக்காது. அதுபோல கடன் கொடுக்கவும் பிடிக்காது. யாரிடமாவது கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டால் அதற்கு பதிலாக ஏதாவது கடன் கொடுத்த நபருக்கு உபகாரம் செய்துவிட முயற்சி செய்வார்கள். அதிகாரம் செய்யும் சுபாவம் இவர்களிடம் அதிகம். இவர்களுக்கு ஏற்ற மனைவி அமைவது மிகவும் கடினம். இதன் காரணமாக வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டதாக கருதி மனம் உடைந்து போவார்கள். எனவே திருமணத்தின்போது தகுந்த மணமகளையோ, மணமகனையோ தேடிக்கொள்வது நல்லது. ஆரம்பகாலத்தில் நாத்திகராக இருக்கும் இவர்கள் காலப்போக்கில் மிகப்பெரிய ஆத்திகராக மாறிவிடும் சூழல் ஏற்படும்.

Post a Comment

 
Top