வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள்
வைகாசியில் பிறந்தவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். காலம்தான் இவர்களுக்கு மறதியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் வாழ்க்கையில் பல அனுபவங்களை பெறுவார்கள். இதை மற்றவர்களிடம் சொல்லி, எனது அனுபவத்தில் நான் இன்னின்ன துன்பங்களையும் இன்பங்களையும் சந்தித்திருக்கிறேன். என்னை முன் உதாரணமாகக் கொண்டு நடந்துகொள்ளுங்கள் என கூறுவர். இதனால் துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக பாவிக்கும் பழக்கம் இவர்களிடம் உண்டு. இவர்கள் திடகாத்திரமான உடலமைப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு நோய் ஏற்பட்டாலும், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் டாக்டரிடம் போகக்கூட வேண்டாம் என நினைத்து தங்கள் பணியை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.அதேநேரம் இவர்களிடம் பொறுமைஅதிகம் என்பதால் வேலையை முடிக்க அதிகநேரம் எடுத்துக் கொள்வார்கள்.இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பதுபோல் இந்த மாதத்தில் பிறந்த தொழிலதிபர்களாக இருந்தாலும் சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவரவர் துறையில் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை வேலைகளை தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு படிப்பு வராவிட்டாலும் அதைப் பற்றி கவலை கொள்ள மாட்டார்கள். தங்கள் அனுபவ அறிவால் படித்தவர்களை விட சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். ஆனால் யாராவது இவர்களிடம் சண்டை போட்டால் கடைசிவரை விடாப்பிடியாக நின்று அதில் வெற்றி பெறும்வரை போராடுவார்கள்.
ஆனால் இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு என்னதான் பொருள் வந்தாலும் அது கையில் நிற்காத அளவிற்கு செலவழிந்து போவதுண்டு. செலவுகளை கட்டுப்படுத்த முயன்றாலும், வீட்டில் உள்ள மற்றவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு செலவழிக்க வேண்டிய அவசியம் வந்துவிடும். இவர்கள் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள். சிறு குடிசையாக இருந்தாலும் கூட அதனுள் நுழைந்தால் பெரிய மாளிகைக்குள்ளோ அல்லது புனிதமான கோயிலுக்குள்ளோ வந்ததுபோன்ற உணர்வு ஏற்படும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் யாரிடமும் லேசாக பழகமாட்டார்கள். பழகியவர்கள் இவர்களுக்கு துரோகம் நினைத்தால் காலம் முழுவதும் அவர்கள் முகத்தில் விழிக்கமாட்டார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு சோம்பல் அதிகம். வேகமாக வேலை செய்துகொண்டிருக்கும்போதே திடீரென சோம்பல் தலைதூக்கி அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். பணம் இவர்களிடம் சேராமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான். இவர்களுக்கு லேசில் கோபம் வராது. கோபம் வந்தால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதுபோல கடுமையான கோபம் வரும். இந்த குணத்தை மட்டும் நீங்கள் மாற்றிக்கொண்டால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. இதுபோல சோம்பல் ஏற்படும் நேரங்களில் மட்டும் அதை எப்படியாவது விடுத்து பணியில் தீவிரம் காட்டினால் வாழ்வில் வருத்தம் என்பதே இருக்காது
Post a Comment