ஆனி மாதத்தில் பிறந்தவர்கள்
ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். இவர்களிடம் மற்றவர்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்திக்கொண்டு இவர்கள் வாழ்க்கையில் மிகவும் முன்னேறத் துடிப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, தானும் சிரித்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள். இவர்களிடம் சிந்திக்கும் சக்தி அதிகம். சிந்தித்ததை செயல்படுத்த வேண்டும் என்றும் கருதுவார்கள். அதேநேரம் இவர்களுக்கு குணம் அடிக்கடி மாறுபடும். ஒரு வேலையை துவங்கி அதை செய்து கொண்டிருக்கும்போதே இன்னொரு வேலையில் கால் வைப்பார்கள். இதனால் பழைய வேலை கெட்டுப்போகும் வாய்ப்பு உண்டு. எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எடுத்த வேலையை முடித்துவிட்டு, அடுத்த வேலைக்கு செல்வது நலம் பயக்கும்.இவர்கள் மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள்.இந்த பேச்சைக்கொண்டு இவர்கள் எழுத்து மற்றும் மேடைப்பேச்சில் ஈடுபட்டால் எதிர்காலம் சிறக்கும். இவர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் சந்தேகப்படுவதும் உண்டு. இதை தவிர்க்க முயல வேண்டும். ஆரம்பிக்கும் முன்பே தீர ஆலோசித்து ஒரு வேலையை தொடங்கினால் இந்த பிரச்னைக்கு இடம் இருக்காது. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஞாபகசக்தி மிக்கவர்கள். ஆனியில் பிறந்தவர்கள் நகைச்சுவை பிரியர்கள். இவர்கள் ரோஷக்காரர்கள். மற்றவர்கள் ஏதாவது தங்களுக்கு இடையூறு செய்தால் அதற்காக வருத்தப்படவும் செய்வார்கள். எரிந்தும் விழுவார்கள்.இவர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களில் யாரையாவது தொழில் காரணமாகவோ பிற காரணங்களாலோ பிரிய வேண்டி வந்தால் அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி அற்றவர்கள். இவர்கள் கட்டட வேலை, வண்டி இழுத்தல் போன்ற வேலைகளை செய்யதயங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக விரும்புவார்கள்.
இந்த மாதத்தில் பிறந்த பணக்காரர்கள் தொழிலதிபர்களாக இருக்கவே விரும்புவார்கள். சிறு சிறு வேலைகளை செய்ய விரும்புவதில்லை. ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பைனான்ஸ் தொழில் சரியாக வராது. இவர்கள் வட்டி வாங்கும் குணம் உடையவர்கள் அல்ல. அதே போல பிறரிடம் கடன் வாங்கினாலும் உடனே திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அரக்கப் பரக்க வேலை பார்ப்பார்கள்.இவர்களில் சிலர் கெட்டவர்களுடன் சகவாசம் வைத்து அதனால் வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தீயவற்றில் இருந்து மீண்டு நல்லதையே செய்து பழகினால் மீண்டும் தீமைகள் இவர்களை அணுகாது. இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இவர்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதே நேரம் குழந்தைகளால் சிறிது காலம்வரை கஷ்டப்படுவார்கள்.
Post a Comment