0

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள்

பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். இவர்கள் விரைவில் போதைப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அதிகமான மனக்கஷ்டங்கள் ஏற்படும் என்பதால் இந்த பழக்கம் உருவாக வாய்ப்புண்டு. எனவே போதைக்கு அடிமையாகாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் திரைப்படத்
தொழிலுக்கு ஏற்றவர்கள். சிற்பக்கலையிலும் ஆர்வம் உண்டு. இயற்கைக் காட்சிகளை ரசிப்பார்கள். கலையை தெய்வமாக கருதி வழிபடுவார்கள். முன்கோபம் அதிகமாக வரும். தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு உழைப்பை மறந்துவிடும் குணமுண்டு. தெய்வ பக்தி அவசியமே எனினும் செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் படபடப்புடன் பேசுவார்கள். நாகரீகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. சினிமா கவர்ச்சி அதிகம். எனவே இவர்கள் ஏமாந்து போகும் நிலையும் வரலாம்.
கலைத்துறைக்கு செல்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த பெண்களில் சிலர் இளவயதில் வறுமையில் வாடும் வாய்ப்பு உண்டு. இவர்களில் பலருக்கு பெண்குழந்தைகளே பிறக்கும். எழுத்து தொழிலுக்கு இவர்கள் ஏற்றவர்கள். எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பார்கள். சுற்றிவளைத்துப் பேசும் குணமுடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதையாக இருப்பார்கள். மற்றவர்கள் இவர்களை பாராட்டி பேசினால் அதில் மயங்கி விடுவார்கள். ஆன்மிகத் துறையில் ஈடுபட்டால் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பசிதாங்கும் சக்தி இவர்களிடம் அதிகம். பங்குனியில் பிறந்த குழந்தைகளிடம் பொய்சொல்லும் வழக்கம் அதிகமாக இருக்கும். பெற்றோருக்கு கட்டுப்படாமல் தங்கள் இஷ்டப்படி
நடப்பார்கள். இந்த குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். இவர்களுக்கு சிறு வயதிலேயே தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது நல்லது.

Post a Comment

 
Top