0

ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள்

ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும் எந்த காரியத்திலும் வல்லவர்கள். இந்த மாதத்தில்தான் ராஜராஜசோழன் பிறந்தான். அவர் கட்டிய தஞ்சை கோயில் காலத்தால் அழியாத ஒன்று. அவரைப் போலவே இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரிய திட்டமாகவே போடுவார்கள். இதனாலேயே இவர்கள் அரசியல்வாதிகளாக ஆவதற்கு தகுதி கொண்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். பெண்களிடம் பழகுவதில் இவர்களைப் போல் வல்லவர்களை காணமுடியாது.

ஐப்பசி மாதத்தில் பிறந்த ஆண்களின் நட்பை பெண்களும் விரும்புவார்கள். இவர்களிடம் பொறுமை அதிகம். உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் உண்டு. இவர்களில் சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட அசைவம் சாப்பிட வேண்டும் என விரும்புவார்கள். பிறரது தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதில் இவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்களிடம் உணர்ச்சிவசப்படும் பழக்கம் அதிகம். பிறர் முன்னிலையில் கவுரவமாக வாழவேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மனைவிக்கு பயப்படமாட்டார்கள்.

இந்தமாதத்தில் பிறந்தவர்களுக்கு மூத்த சகோதரர்கள் இருப்பது அபூர்வமான
ஒன்றாகும். நீதித்துறையில் நுழைந்தால் இவர்கள் ஜொலிப்பார்கள்.இந்த
மாதத்தில் பிறந்த பெண்கள் எந்த வேலையையும் தாமதமாகவே செய்வார்கள்.
தெய்வபக்தி அதிகமாக இருந்தாலும் இவர்களிடம் கர்வமும் அதிகமாக இருக்கும். கல்லூரிக்கு சென்று படிக்காவிட்டாலும் சாதாரண கல்வி அறிவு உள்ளவர்கள்கூட ஏதாவது வேலை செய்து வாழ்க்கையை நடத்தவேண்டும் என எண்ணுவார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு நகைகள், உடைகள் மீது ஆர்வம் அதிகம். ஆனால் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளால் வாழ்நாள் முழுவதும் சிரமம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்துவிடும். அவ்வாறு நடக்காவிட்டால் மிகவும் தாமதமாகிவிடும்

Post a Comment

 
Top