0
சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில்  திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு ச்னி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம் விருச்சிகம் ராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்.

விசாகம் 4ஆம் பாதமும் ,அனுஷம்,கேட்டை முடிய உள்ள நட்சத்திரங்களை சேர்ந்த விருச்சிகம் ராசி நண்பர்களே.....ஏழரை சனியில் முதல் இரண்டரை வருடங்களை வரும் நவம்பர் 2ஆம் தேதியுடன் வெற்ரிகரமாக கடந்துவிட்டீர்கள்...இனி ஜென்ம சனி ஆரம்பம்....சந்திரன் உங்கள் ராசியில் ஏற்கனவே நீசமாகி இருக்கிறார்..இதனால்தான் இந்த ராசிக்காரர்கள் பலரும் உண்மையான அன்பு ,பாசத்துக்கு ஏங்குகிறவர்களாக இருக்கிறார்கள்...காரணம் இவர்களையும் அறியாமல் வெளிப்படுத்தும் கடினமான சொற்கள் உறவுகள்,நட்புகளை இவர்களிடமிருந்து பிரித்துவிடுகிறது...இந்த ராசிக்கு தேள் படம் போட்டிருப்பதே நன்மை செய்வோர்க்கும் கெடுதல் செய்யுமாம் தேள்...என்ப்[அதும் ஒரு காரணம்...தேள் போல சுடு சொற்களால் கொட்டி கொண்டே இருப்பார்கள் என்பதும் ஒரு காரணம் ..முடிந்தவரை அமைதியாக இருங்கள்...அன்பாக பேசுங்கள்..இரு குணமாக செயல்படாதீர்கள்..காலையில் அன்பு..மாலையில் வெறுப்பு என இல்லாமல் நிதானமாக செயல்படுங்கள்..

உங்களைப்போன்ற நல்லவர்கள்..கடின உழைப்பாளிகள்,யாரும் இருக்க முடியாது...முடிந்தவரை பிறருக்கு நன்மை செய்யவே விரும்புவீர்கள்..எவ்வளவுதான் பிறருக்கு உதவினாலும் கடைசியில் அவர்களிடம் இருந்து கெட்டப்பெயர்தான் கிடைக்கிறது புலம்புவீர்கள் ..இது உணமிதான்..சந்திரன் கெட்டிருப்பதால் தாயே சிலருக்கு பகையும் ஆகி விடுகிறார்..சிலர் தாயை பிரிந்தும் வாழ நேர்கிறது..

ஜென்ம சனி சந்திரனுடன் சனி சேர்வதி குறிக்கும்..இருளும் ஒளியும் சேர்கிறது...சந்திரனை நிழல் மறைத்து சந்திர கிரகணம் உருவாகுதல் போலத்தான்...சனியும் சந்திரனும் சேர்ந்தால் அதிக மனக்குழப்பம்,பதட்டம் உண்டாகும்...காரிய தடைகள்,உண்டாக்கும்...மனம் தெளிவாக செயல்படாததால் ஏமாற்றம் உண்டாகிறது...உஅடல்நிலையில் அதிக கவனம் தேவை ...

ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் குரு இப்போது இருப்பதால் அடுத்த ஜூன்மாதம் வரை 5.7.2015 வரை சனியால் உண்டாகும் பாதிப்புகள் குறையும்...குரு பெயர்ச்சிக்கு பின்னர் குரு 10 ஆம் இடத்துக்கு போன பிறகுதான்..சொந்த தொழில் செய்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்...புதிய முதலீடுகளில் எச்சரிக்கை தேவை..கடன் அதிகரிக்கும் காலமக இருக்கிறது வரவு செலவில் நிதானம் அவசியம்..வாகனங்களில் செல்லும்போது கவனம் வேண்டும். இரவு பயணத்தை தவிர்க்கலாம்...குருப்பெயர்ச்சிக்கு பின்னர் பண முடக்கம் அதிகமாகும் என்பதால் குரு பலம் இருக்கும்போதே சேமிப்பை கையாளவும்..

ஜென்ம சனி தொழில் மாற்றம் ,வேலை மாற்றம்,வீடு மாற்றத்தை உண்டாக்கும்..உறவினர்களில் நெருங்கியவர்களுக்கு அடுத்த ஜூலைக்கு மேல் கண்டத்தை உண்டாக்கும்..தொடர்ச்சியான மருத்துவ செலவுகள் மன உளைச்சலை உண்டாக்கும் கணவன் மனைவியரிடையே எப்போதும் ஈகோ மோதல் நடந்துவரும்...விருச்சிக ராசிக்காரங்க தன் துணை யிடம் எவ்வளவு அன்பாக பேசுகிறார்களோ அதே அளவு வெறுப்பாக நடந்துகொள்வார்கள் இது இக்காலத்தில் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் கோபத்தை கொஞ்ச நேரம் தள்ளிப்போட்டு யோசித்து செயல்படவும்..

சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........பாதிப்புகள் குறையும்.

Post a Comment

 
Top