சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்....அது சமயம்தனுசுராசியை சேர்ந்தவர்களுக்கு என்ன பலன்கள் உண்டாகும் என பார்ப்போம்
பன்னிரெண்டு ராசிகளிலேயே மனிதாபிமானம் அதிகமுள்ள ராசி மகரம்தான். புறங்கூறுதல், மறைத்துப் பேசுதல், மனசாட்சிக்கு எதிராக செயல்படுதல் என்பதெல்லாம் அறவே உங்களுக்குப் பிடிக்காது. ஆரம்ப காலத்தில் வாழ்வில் அடிபட்டு,போராடி வெற்றிகளை சந்தித்ததால் பணம், புகழ், பதவி வந்தாலும் பெருமையாக வாழத் தெரியாது. வியாபாரமாக இருந்தாலும், உத்யோகமாக இருந்தாலும் ஏனோதானோ என்றில்லாமல்ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள்..
உத்திராடம் 2,3,4 ஆம் பாதங்கள் மற்றும் திருவோணம்,அவிட்டம் நட்சத்திரங்களை சேர்ந்த மகரம் ராசி நண்பர்களே...உங்கள் ராசி நாயகனாகிய சனி பகவான் தனம்,வாக்கு ,குடும்பம் போன்றவற்றை குறிப்பிடும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி ஆவார்.தற்போது கோட்சாரப்படி லாபஸ்தானம் எனும் பதினொன்றாம் வீட்டில் பிரவேசிக்கிறார் ஏற்கனவே கடக ராசியில் பிரவேசித்து சஞ்சரித்து கொண்டிருக்கும் குருவின் சுப பார்வை ராசிக்கும்,சனிக்கும் உண்டாகிறது.சனிக்கு பதினொன்றாம் வீடு சிறப்பானது...
ஆரோக்கிய பாதிப்புகள் ,மருத்துவ செலவுகள் முற்ரிலும் நீங்கும்.தனாதிபதி லாபத்தில் இயங்குவதால் வருமானத்துக்கு குறைவே இருக்காது..முன்பை விட பல மடங்கு அதிகரிக்கும்.இதனால் நீண்ட கால கடன்கள் அடைபடும்.
புதிதாக கடன் வாங்கி தொழில் செய்யலாமா ,வீடு கட்டலாமா என தயங்கி கொண்டிருப்பவர்கள் இனி தயக்கமின்றி அதை செய்யுங்கள்.எந்த பிரச்சினையும் இல்லாமல் கடனை அடைத்துவிடலாம்
உழைப்பிற்கும் ,திறமைக்கும் ஏற்ற லாபம் நிச்சயம் கிடைக்கும்.மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு உயர்வுக்கு வழிவகுக்கும்.இரண்டிற்குறிய சனி பதினொன்றில் உள்ளதால் புகழும்,செல்வாக்கும் அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் பதவி உயர்வும் நிச்சயம் கிடைக்கும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும் இட மாறுதலும் கிடைக்கும்..
கலைத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளிச்சம் அடையும் காலம் இப்போதுதான் காரணம் சனி ஜென்ம ராசி,ஐந்தாம் இடம்,எட்டாம் இடத்தை பார்வை செய்வது இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வருவது போலாகும்...
உத்திராடம் நட்சத்திரம் சார்ந்தவர்கள் தெய்வ வழிபாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் புதிதாக ஒன்றை சாதிப்பார்கள் உறவினர்கள் புகழும்படி நிலைத்த செல்வாக்கு அமையும்படி நல்ல காரியம் ஒன்று உங்களால் நடைபெற போகிறது
திருவோணம் நட்சத்திரத்தா கலைத்துறையில் இருப்பின் எதிர்பாராத வெற்றியும் பெரிய மனிதர்களின் ஆதரவால் திடீர் உயர்வை அடைவீர்கள்....பணியில் இருப்பவர்கள் இரட்டிப்பு லாபம் பிறர் பொராமைப்படும்படி அடைவீர்கள்
அவிட்டம் நட்சத்திரத்தார் வீடு கட்டுதல்,நிலம் வாங்குதல் போன்ற நீண்ட கால முதலீடுகளை செய்வீர்கள்..
சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment