சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும்..?
பூரட்டாதி 4,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களை சேர்ந்த மீனம் ராசி நண்பர்களே...அஷ்டம சனியின் பிடியில் இருந்து நவம்பர் 2 முதல் ஆனந்தப்படப்போகிறீர்கள்....பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாம் வீட்டிற்கு சனி பெயர்ச்சியாகிறார்..பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வீட்டுக்கு உரிய சனிபகவான் ஜென்ம ராசியை போன்று சிறப்பம்சங்களை கொண்ட ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார்...இப்பெயர்ச்சி ஆரம்ப காலத்தில் உங்கள் ராசி நாயகனாகிய குரு பகவான் ஐந்தாம் வீட்டில் உச்சமாக இருக்கிறார்..சனியையும் பார்க்கிறார் அப்புறமென்ன தொழிலும் ,செல்வாக்கும் மடமடவென உயரப்போகிறது இதுவரை இருந்து வந்த வருத்தங்கள்,துயரங்கள்,தடைகள் விலகி வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்..தொழில் மந்தம் நீங்கி சுசுறுப்பாக செயல்படும்.
திருமணம் தாமதம் விலகும் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..சமூகத்தில் ,நண்பர்களிடத்தில் ,உறவினர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்...சனிப்பெயர்ச்சி காலமான சுமார் இரண்டரை ஆண்டுகள் குரு சனியின் வீடுகளான லாபஸ்தானம் மற்றும் விரய ஸ்தானங்களை மாறி மாறி பார்க்கப்போகிறார்...வழக்குகள் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் நீண்ட கால கடன்கள் அடைபடும்...தொடர் தோல்விகள் மாறி தொடர் வெற்றிகள் உண்டாகும்..மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்ரங்கள் காண்பார்கள் பெண்கள் புதிய ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வார்கள் ...பணியில் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும்.விரும்பிய இடமாறுதல் கிடைக்கும்..
மூன்றாம் வீட்டிற்கு பத்தாமிடத்து அதிபதியான சனி மூன்ராமிடத்தை பார்ப்பதால் இளைய உடன்பிறப்புகளால் ஆதரவும் கிடைக்கும் அவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.மூத்த சகோதரருக்கும் நல்ல மாறுதல்கள் வாழ்வில் உண்டாகும்.உடல்நிலை பதிப்புகள் அகலும் மருத்துவ செலவுகள் நீங்கும்.....ஆரோக்கியம் உண்டாகும்..
சனி வக்கிரமாக சஞ்சரிக்கும் போது செலவினம் கூடும் கவனம் தேவை...
சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்........இந்த காலங்களில் சனி பாதிப்பு இருந்தால் குறையும்..
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment