சனிபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 16.12.2014 முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..இது திருநள்ளாறு கோயிலில் அனுஷ்டிக்கும் தேதியாகும்..துல்லியமான கணக்கு எனில் திருக்கணித பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 16 ஆம் நாள் 2.11.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.54 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு மாறுகிறார்.மேசம் ராசிக்கு அதுமுதல் அஷ்டம சனியும் ,ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும் ,சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும் ,விருச்சிக ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது...19.12.2017 வரை இது நீடிக்கும்..
ரிசப ராசி -கண்டகச்சனி என்ன பலன் கொடுக்கும்..?
அன்பும்,நகைச்சுவை உணர்வும் அதிகம் கொண்டவர் நீங்கள்...நாமும் சந்தோசமா இருக்கனும்..மத்தவங்களும் சந்தோசமா இருக்கனும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்...வாழ்க்கையில் உயர்வதைப்பற்றியே எந்த நேரமும் சிந்திப்பீர்கள்..ஆடம்பர பங்களா ,சொகுசான கார்,சுற்றுலா இவற்றில் அதிக விருப்பம் கொண்டவர்...புத்திக்கூர்மை அதிகம் கொண்டவர் உங்கள் ராசியில் சந்திரன் உச்சம் ஆவதால் அழகு,சுகம் இவர்ருக்கு குறையே இருக்காது...பணம் ஏதேனும் வந்துகொண்டே இருக்கும் நீங்கள் இருக்கும் இடம் உங்களைப்போலவே செழிப்பாக,அழகாக இருக்கும்...அம்மாவின் தீராத அன்பும்,பாசமும் கொண்டவர்...எதை தொட்டாலும் வெற்றி எனும் கைராசிக்காரர்..இந்த ராசியில் பிறந்த குழந்தைகள் நல்ல முகராசி கொண்டவர்களாக இருப்பார்கள்..
உங்க ராசிக்கு சனி நல்லவரா கெட்டவரா என பார்த்தால் சனி நல்லவர்...அவர்தான் உங்களுக்கு ராஜ யோகாதிபதி....அவர் இதுவரை உங்களுக்கு ராசிக்கு 6ல் இருந்து நன்மைகளை செய்துவந்தார் சிலருக்கு கடந்த இரண்டு வருடத்தில் பெரிய நன்மைகளையும்,சொத்துக்களையும் வாரி வழங்கி இருப்பார்...சிலருக்கு நல்ல தொழில் அமைத்து கொடுத்திருப்பார் திருமணம் செய்திருப்பார்....இப்போது சனி ராசிக்கு 7ல் சஞ்சாரம் செய்ய இருக்கிறார் இது கெடுதல் தருமா..? என பார்த்தால் 7ஆமிட கண்டக சனி..இது கணவன் மனைவிக்குள் தீராத பகையை உண்டாக்கும்...பிரிவை உண்டாக்கும்...வாகனத்தில் செல்லும்போது விபத்தை உண்டாக்கும் ..சொத்துக்கள் தகராறு வரும்...வாகனத்தால் நஷ்டம் வரும் கால்நடைகள்,வளர்ப்பு பிராணிகளால் துன்பம் வரும் என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..எல்லா ரிசப ராசியினருக்கும் இந்த பலன் அப்படியே நடக்காது இதன் தாக்கம் ஓரளவு இருக்கும்...ஜாதகத்தில் லக்னத்துக்கு மோசமான அஷ்டமாதிபதி,ஆறாம் அதிபதி திசை நடந்தால், சனி கெட்டிருந்தால் பாதிப்பு கொஞ்சம் கூடுதலாக இருக்கும்...
ரிசபராசிக்கு ஏழரை சனி கூட பெரிய பாதிப்பு தருவதில்லை காரணம் இவர்களுக்கு சந்திரன் உச்சம் பெற்று இருப்பதால் மனோ திடத்தால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் இயற்கையில் பெற்று இருக்கிறார்கள்..இதனால் மந்தன் எனும் சனியின் பாதிப்பு சற்று குறைவுதான்..சனி ராசிக்கான பாதிப்பு தரும் சமயம் அலட்சியம் கூடும்..சோம்பல் அதிகமாகும்..கடின உழைப்பு குறையும் இதனால் தோல்வி,முடக்கம் அதிகம் காணப்படும் இதனால் ஏற்படும் சிக்கல்கள் பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணும்..சனி 7ல் இருந்தால் கணவன் /மனைவியை பார்த்தால் எரிச்சல்,கோபம் அதிகமாகும்..வெறுப்பு உண்டாக்கும்..அவர்கள் செய்யும் சின்ன தவறும் பெரிதாக இந்த காலகட்டத்தில் தெரியும் அல்லது உங்களுக்கு பிடிக்காத விசயத்தை அவர்கள் செய்து உங்களுக்கு அவநம்பிக்கையை உண்டக்கும்படி நடந்துகொள்வார்கள்...இந்த காலகட்டத்தில் வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை உங்களுக்கு இயற்கையில் கற்பனை வளம் அதிகம்...எப்போதும் கற்பனையில் இருக்கும் உங்களுக்கு வண்டியில் போகும்போதுதான் அதிக கற்பனை ஊற்றெடுக்கும் அது விபத்தை உண்டாக்கும் வாய்ப்பு இந்த நேரத்தில் இருக்கு..
சொந்த தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை..பார்ட்னர் உங்க ராசிக்கு எட்டாவது ராசியா அதாவது தனுசா இருந்தா இன்னும் கவனம் வேணும்...நீங்கள் ஏமாற இந்த நேரத்தில் வாய்ப்பு அதிகம்..கல்வியில் கவனம் இன்னும் குறைந்து கெட்ட சேர்க்கைகள் உண்டாகும் காலம் என்பதால் இந்த ராசிக்கார குழந்தைகளை கண்காணிப்பது அவசியம்.
சனி வக்ரம்;15.3.2015 முதல் 2.8.2015 வரையிலும் ,26.3.2016 முதல் 13.8.2016 வரையிலும் சனி இரண்டு முறை வக்ரகதி அடைகிறார்..இக்காலங்களில் அஷ்டம சனி பாதிப்பு இருக்காது....எனவே சந்தோசப்படுங்கள்...கிட்டத்தட்ட 10 மாசம் சனி தொந்தரவில் இருந்து தப்பிக்கிறீர்கள்.. அது சமயம் கண்டகச்சனி பாதிப்பு இருக்காது.....
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment